×

விநாயகர் சிலை வைக்க பந்தல் அமைத்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி

மாதவரம், ஆக.27: செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் மண்ணடியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் (22). இவர், பந்தல் அமைக்கும் கடையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை மாதவரம் ராஜாஜி தெருவில் சிலை வைப்பதற்கான பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற உயரழுத்த மின்கம்பி மீது கம்பி உரசியதால், மின்சாரம் பாய்ந்து பிரசாத் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பிரசாத் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த மாதவரம் போலீசார், பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : VINAAKAR ,STATUE ,Madhavaram ,Prasad ,Mandiyamman Temple Street ,Vinayagar Chaturthi ,Madhavaram Rajaji Street ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...