×

பெரும்பள்ளம் ஓடையில் ஆக்கிரமிப்பு வீடுகள் விரைவில் அகற்றம்

ஈரோடு, டிச.11: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் பெரும்பள்ளம் ஓடையை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.182கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக ஓடை ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், குயவன் திட்டு பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 70 வீடுகள் நேற்று அகற்றும் பணிக்காக நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதவாது:பெரும்பள்ளம் ஓடை ஆக்கிரமித்து இருந்த 150 வீடுகள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு வசித்து வந்தவர்களுக்கு சித்தோட்டில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 109 பயனாளிகளும் வீடுகள் ஒதுக்கீட்டுக்கு தர வேண்டிய ரூ.1லட்சத்தை, 150பேருக்கு மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை பயன்படுத்தி செலுத்தப்பட்டது. குயவன் திட்டு பகுதியில் 70 வீடுகள் மட்டும் ஆக்கிரமிப்பில் அப்புறப்படுத்தாமல் இருந்தன. இதில், 70 பேரில் 30பேர் குடும்பத்தினர் பெயரில் இரண்டு, மூன்று முறை வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனால், உண்மையான பயனாளி யார்? என கண்டுபிடித்து ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கும் நல்லகவுண்டன்பாளையத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்படுவதோடு மாநகராட்சி சார்பில் பணமும் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : houses ,stream ,
× RELATED குமரி முழுவதும் பரவலாக சாரல் மழை: மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன