சென்னை: விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீட்டின் கீழ், வேலைவாய்ப்புக்கு செப்டம்பர் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுவான தகுதிகளாக, விளையாட்டு வீரர்கள் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து குறைந்தபட்ச கல்வித் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். விளையாட்டு வீரர்கள் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பாரா-தடகள வீரர்களுக்கான வயது வரம்பு 50 வயதிற்குள் இருத்தல் வேண்டும். 3 சதவீத விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை பெற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுதலின்படி 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் காலை 10 மணி முதல் வரும் செப்டம்பர் 24ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் .
