×

இந்திய ராணுவ வீரர்கள் மதத்தின் அடிப்படையில் தீவிரவாதிகளை கொல்லவில்லை: ராஜ்நாத் சிங் பேச்சு

ஜோத்பூர்: ‘‘சிந்தூர் ஆபரேஷனில் நமது வீரர்கள், தீவிரவாதிகளை அவர்களின் மதத்தின் அடிப்படையில் கொல்லவில்லை ’’ என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூரின் போது, முப்படைகளின் தளபதிகளையும் அழைத்து நடவடிக்கைக்கு தயாரா என கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருமனதாக ‘எந்த நடவடிக்கைக்கும் தயாராக இருக்கிறோம்’ என பதிலளித்தனர். இதுதான் இந்தியா. அப்போது பிரதமர் மோடி தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கினார். இதனால் தீர்மானிக்கப்பட்ட இலக்கு திட்டமிட்டபடி துல்லியமாக தாக்கப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் ஆபரேஷன் சிந்தூரின் போது நமது ஆயுதபடைகளுக்கும், அரசுக்கும் எல்லைப்பகுதி மக்கள் முழு ஆதரவு தந்தனர். இந்தியா சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை. ஆனால் தீவிரவாதிகள் மதத்தை அடையாளம் கண்ட பிறகு மக்களைக் கொன்றனர். நமது வீரர்கள் மதத்தின் அடிப்படையில் தீவிரவாதிகளைக் கொல்லவில்லை. அவர்களின் செயல்களுக்காகவே பழிதீர்த்தனர் என்றனர்.

Tags : Rajnath Singh ,Jodhpur ,Sindh ,Defence Minister ,Jodhpur, Rajasthan ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...