×

சில்லி பாய்ன்ட்…

* முடிவுக்கு வந்த ட்ரீம் 11 ஒப்பந்தம்
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சீருடையில் ‘ட்ரீம் 11’ என்று பெரிதாக அச்சிட 358 கோடி ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறது பிசிசிஐ. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு, ஆன்லைன் சூதாட்ட ஒழுங்கு முறை மசோதா 2025-யை நிறைவேற்றி உள்ளதால் பிசிசிஐ நிறுவனம் – ‘டிரீம் 11’ இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆசிய கோப்பை சீருடைக்கான விளம்பரதாரரை உடனடியாக தேட வேண்டிய சூழலில் பிசிசிஐ உள்ளது. புதிய விளம்பரதாரர் கிடைக்காவிடில் இந்திய வீரர்கள் சீருடையில் பிசிசிஐ பெயர் மட்டுமே இருக்கும்.

* பாத்திமா தலைமையில் பாக். அணி அறிவிப்பு
இஸ்லாமாபாத்: வரும் செப். 30 முதல் நவ.2 வரை, இந்தியா, இலங்கையில் மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணியில் பாத்திமா சனா தலைமையில் 15 பேர் கொண்ட அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் 20 வயதான எய்மன் பாத்திமா முதல் முறையாக இடம் பிடித்துள்ளார்.

* டிசம்பரில் எஸ்ஏ 20
ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவின் டி20 லீக் போட்டியான எஸ்ஏ 20 வழக்கமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும். அதற்கு மாறாக 4வது சீசன், இந்த முறை டிசம்பரில் நடைபெற உள்ளது. அதற்கான வீரர்கள் ஏலம் செப்.9ம் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெறும்.

Tags : Chilli Point… ,Dream11 ,New Delhi ,BCCI ,Union government ,Parliament… ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...