×

திருப்பரங்குன்றம் பகுதியில் விஜய்க்கு எதிராக கண்டன போஸ்டர்

திருப்பரங்குன்றம்: தவெக 2வது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய விஜய் திமுகவையும், முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனை கண்டித்து திமுக தலைவர்கள் பலரும் அறிக்கை வெளியிட்டனர்.

திமுக சார்பில், சமூக வலைதளத்திலும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விமல் தரப்பில், திருப்பரங்குன்றம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், விஜய்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இவற்றில் ‘‘வாட் ப்ரோ… ஓவர் ப்ரோ… அடக்கி வாசிங்க ப்ரோ’’ என்ற வாசகங்கள் வாயிலாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். திமுக மட்டுமின்றி அதிமுக, பாஜ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விஜய்க்கு எதிராக தங்கள் கண்டன கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில், திமுக இளைஞரணியின் போஸ்டர்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Vijay ,Tiruparangundaram ,Thiruparangundaram ,2nd State Conference of Daveka ,Barabathi ,Madurai ,Dimuga ,Dimuka ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...