×

ஓவியர் சங்கம் கோரிக்கை தஞ்சை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தஞ்சை, டிச. 11: தஞ்சை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதானை நடத்தி கணக்கில் வராத ரூ.79 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் பின்புறம் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை 5.45 மணிக்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு தடுப்பு போலீஸ் டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர் பத்மாவதி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் வந்து சோதனை நடத்தினர். மேலும் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திர எழுத்தர்கள், பத்திர எழுத்தரின் உதவியாளர்களிடமும் சோதனை நடத்தினர்.

இதில் பத்திர எழுத்தர்கள் ராஜராஜனிடம் ரூ.37,500, பிரபாகரனிடம் ரூ.14,500, பத்திர எழுத்தர்களின் உதவியாளர்கள் ராஜ்குமாரிடம் ரூ.8,800, தேவேந்திரனிடம் ரூ.18,200 என மொத்தமாக ரூ.79 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து டிஎஸ்பி மனோகரன் கூறுகையில், தஞ்சாவூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணம் அதிகளவில் புழங்குவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாலை 5.45 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து இரவு 9 மணி வரை ஊழியர்களிடம் விசாரணை, சோதனை நடத்தினோம். நேற்று மட்டும் 53 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் சார்பதிவாளர் இளையராஜாவுக்கு லஞ்சமாக கொடுக்க வைத்திருந்த ரூ.79 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இளையராஜா உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்படும் என்றார்.

Tags : affiliate ,Tanjore ,Painters Association ,
× RELATED தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து...