×

வான்கடே மைதானத்தில் கவாஸ்கர் சிலை திறப்பு

மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள எம்சிஏ ஷரத்பவார் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில்கவாஸ்கரின் முழு உருவ சிலை திறக்கப்பட்டது. 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது, சச்சின் டெண்டுல்கரின் பிரமாண்டமான சிலை திறக்கப்பட்டது. தற்போது கவாஸ்கருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கவாஸ்கர் பேசுகையில், “நான் எப்போதும் கிரிக்கெட் வரலாற்றைப் படிக்கும் மாணவனாகவே கருதுகிறேன் என்று சொல்ல வேண்டும். நாங்கள் விளையாடும் நாட்களில், வீடியோக்கள் எதுவும் இல்லை. புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் மட்டுமே. நாங்கள் படிப்பதன் மூலமும், சுயசரிதைகள் மூலமும், எழுதப்பட்ட வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொண்டோம். அதனால்தான் இந்த அருங்காட்சியகத்தைப் பார்ப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகிறது.

மும்பை கிரிக்கெட் சங்கம், மும்பை கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளது. இங்கு வருகை தரும் இளம் வீரர்கள் பாதுகாக்கப்பட்டுள்ள கதைகள் மற்றும் வரலாற்றில் உத்வேகம் பெறுவார்கள்’’ என்றார்.

Tags : Kavaskar ,Vancade ,Sunil Kwaskar ,MCA Sharatbawar Cricket Museum ,Vanguade Stadium ,Mumbai ,2023 ODI World Cup ,Sachin Tendulkar ,Kawasaki ,
× RELATED உலகக் கோப்பை டி20: சூர்யகுமார்...