×

சுங்க வரிகளில் மாற்றத்தால் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம்: நாளை அமல், இந்தியா அதிரடி

புதுடெல்லி: சுங்க வரிகளில் செய்யப்பட்ட மாற்றத்தை தொடர்ந்து அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நாளை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஒன்றிய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி அமெரிக்க அரசு பிறப்பித்த நிர்வாக உத்தரவில், இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் 100 டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படும் எனக் கூறியது.

இந்த உத்தரவு வரும் 29ம் தேதி அமலுக்கு வருகிறது. இதுவரை 800 டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு எந்த சுங்க வரியும் கிடையாது. இந்த உத்தரவை தொடர்ந்து, அமெரிக்கா செல்லும் விமான நிறுவனங்கள் பொருட்களை எடுத்துச் செல்ல மறுத்துள்ளன. இதனால், நாளை முதல் இந்திய அஞ்சல் துறை மூலம் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையில், ‘வரும் 25ம் தேதிக்குப் பிறகு அஞ்சல் சரக்குகளை ஏற்க அமெரிக்கா செல்லும் விமான நிறுவனங்கள் மறுத்துள்ளன. இதனால் அஞ்சல் துறை அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. ஆனாலும், 100 டாலருக்கு குறைவான கடிதங்கள், ஆவணங்கள், பரிசுப் பொருட்களை அஞ்சல் துறை மூலம் வழக்கம் போல் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : US ,India ,New Delhi ,Union Ministry of Communications ,President Trump ,
× RELATED மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு...