×

தமிழகத்தில் நடப்பாண்டில் 47.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை: அமைச்சர் சக்கரபாணி தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அளித்த பேட்டி: கடந்த அதிமுக ஆட்சியில் 376 அரிசி ஆலைகள் தான் இருந்தது. திமுக ஆட்சியில் 700 அரிசி ஆலைகள் உள்ளது.

அதிமுக ஆட்சியில் அரிசி ஆலைகளில் 6 லட்சம் மெட்ரிக் டன் அரிசி அரைக்கப்பட்டு வந்தது. தற்போது 12 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 47 லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு குவிண்டால் நெல்லின் விலை ரூ.1,960 ஆக இருந்தது.

செப்.1ம் தேதி முதல் சன்ன ரகத்திற்கு ரூ.2,545, மற்ற ரகங்களுக்கு ரூ.2,500 தரப்பட உள்ளது. தேர்தல் வாக்குறுதியை விட தற்போது ரூ.45 கூடுதலாக வழங்க உள்ளோம். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தவறை தடுக்க ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தொலைபேசி எண்ணுடன் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அந்த எண்ணிற்கு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Minister ,Chakrapani ,Dindigul ,Dindigul Collector ,Food ,Ara Chakrapani ,AIADMK ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...