×

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் ரூ.58 லட்சம் காணிக்கை

*312 கிராம் தங்கம், 842 கிராம் வெள்ளியும் இருந்தது

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் 3மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின்படி, உதவி ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில், செயல் அலுவலர் பழனிசாமி முன்னிலையில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

இதில் 7 நிரந்தர உண்டியல்கள், 8 தற்காலிக உண்டியல்கள் என மொத்தம் 15 உண்டியல்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வீடியோ பதிவுடன் திறக்கப்பட்டன. தொடர்ந்து தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

முடிவில், ரூ.58 லட்சம் பணம், 312 கிராம் தங்கம், 842 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அவை தனியார் வங்கி மேலாளர் இன்பஎழிலனிடம் ஒப்படைக்கப்பட்டு வங்கி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

Tags : Padavedu Renakampal Temple ,Kannamangalam ,Undyal Offering ,Padavedu Renukampal Temple ,PADAVEDU ,RENUKAMBAL TEMPLE ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...