சென்னை: பிளஸ் 1 துணைத் தேர்வு மறுமதிப்பீடு, மறு கூட்டல் தேர்வு முடிவுகள் 25ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த பிளஸ்1 பொதுத் தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ மாணவியருக்காக ஜூலை மாதம் துணைத் தேர்வு நடந்தது.
அந்த துணைத் தேர்வில் பங்கேற்று மறுகூட்டல், மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பித்த மாணவ மாணவியரில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவ மாணவியரின் பதிவெண் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 25ம் தேதி பிற்பகலில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
இந்த பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாளில் எவ்வித மாற்றமும் இல்லை. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்களின் தேர்வெண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவு செய்து தங்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.
