புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் அளி த்த பேட்டியில், “2014ம் ஆண்டு முதல், அரசியலமைப்பு நமக்கு வழங்கிய மனித உரிமைகளை பறிப்பதை நோக்கமாக கொண்ட இதுபோன்ற பல்வேறு சட்டங்களை பார்த்திருக்கிறோம். எதிர்க்கட்சிகள் அமைச்சர்கள், முதலமைச்சர்களை குறி வைத்து புதிய மசோதாக்களை மோடி அரசு தாக்கல் செய்துள்ளது. இது அரசியலமைப்பின் அடிப்படை வளாகத்தையே அழிக்கும். இது அரசியலமைப்பை அரிக்கும் கரையான்கள் போல செயல்படும்” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
