×

அமைதியும், மகிழ்ச்சியும், கிடைக்க அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்: இந்திய ஹஜ் அசோசியேசன்

டெல்லி: அமைதியும், மகிழ்ச்சியும், கிடைக்க அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள் என இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களின் முக்கிய மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்திற்கான பிறை கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தென்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மார்ச் 21 ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்நிலையில் இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்; இஸ்லாமியர்களின் உன்னதமான, உயர்ந்த பண்டிகை ரமலான் திருநாள். ஒரு மாத காலம் நோன்பிருந்து, தன் உடலை வருத்தி, அடுத்தவரின் பசிப்பிணி ஆற்றி இறைவனை தொழுதோம். வயிற்றுக்கு உணவிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்பதை முழுமுதற் கடமையாய் கொண்டோம்.

இந்த ரம்ஜான் நாள் தொடங்கி அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், முழு உடல் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். சமய நல்லிணக்கம், அன்பு, கருணை கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையாய் வீடும்,நாடும் சிறக்கட்டும். இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Ramadan ,Indian Hajj Association ,Delhi ,Hajj Association of India ,Hajj ,Hajj Association ,Islamists ,Muslims ,
× RELATED தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து...