×

மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டியில் எட்டயபுரம் பள்ளி மாணவர்கள் வெற்றி

எட்டயபுரம், ஆக.22:எட்டயபுரம் ராஜா மேல்நிலை பள்ளி மாணவர்கள் வருவாய் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். எட்டயபுரம் ராஜா மேல்நிலை பள்ளியில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான பேட்மிண்டன் போட்டி நடந்தது. தூத்துக்குடி, திருச்செந்தூர், நாசரேத், கயத்தார், கோவில்பட்டி, எட்டயபுரம் பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் 19வயது மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு அணிகளும் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணனையும் பள்ளி செயலாளர் ராம்குமார்ராஜா, நிர்வாக குழு உறுப்பினர் சந்திரன், தலைமை ஆசிரியர் பழனிக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Ettayapuram ,Ettayapuram Raja Higher Secondary School ,Thoothukudi ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...