சேலம், ஆக.22: சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு மாதத் திலும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (22ம் தேதி) நடக்கிறது. உற்பத்தி, தொழில்துறை, வங்கி, நிதி உள்ளிட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான கல்வி தகுதிகளை கொண்டவர்களும் முகாமில் கலந்து கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் துணை இயக்குநர் மணி கேட்டுக்கொண்டுள்ளார்.
