×

பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளி சாவு

கெங்கவல்லி, ஆக.22: ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டம் புருனுயா பகுதியை சேர்ந்தவர் தானுசிங் மகன் திலிப்சிங்(42). கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்த இவர், வீரகனூர் அருகே புளியங்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவரது விவசாய கிணற்றில், சைடு போர் போடும் பணியை செய்து வந்தார். கடந்த 16ம் தேதி, பணியில் இருந்தபோது திலிப்சிங் பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடால், கழுத்தை அறுத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட சக பணியாளர்கள், உடனடியாக அவரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திலிப்சிங், தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் கஹனேய்சிங் கொடுத்த புகாரின் பேரில், வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags : Gengavalli ,Dilip Singh ,Thanu Singh ,Purunuya ,Mayurbhanj district, Odisha ,Tamil Nadu ,Murugesan ,Puliyankurichi ,Veeraganur ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்