ஓமலூர், ஆக.22: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் நேற்று காலை, தனது காரில் சேலம் சென்றுள்ளார். ஓமலூரில் வேகத்தடையில் கார் ஏறி இறங்கிய போது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென தீப்பற்றியது. புகை அதிகமானதால் பதட்டமடைந்த சம்பத்குமார், காரில் இருந்து இறங்கி, அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் பிடித்து வந்து கார் மீது ஊற்றி தீயை அனைத்தார். இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை முழுமையாக அணைத்தனர். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
