×

பிரதமர் மோடி தலைமையில் சீர்த்திருத்த நடவடிக்கை குறித்த உயர்மட்ட கூட்டம்

புதுடெல்லி: கடந்த 15ம் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் அடுத்த தலைமுறை பொருளாதார சீர்த்திருத்தங்களுக்காக பணிக்குழு உருவாக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அடுத்த தலைமுறை சீர்த்திருத்தங்களுக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல் மற்றும் லாலன் சிங் ஆகியோருடன் பல்வேறு அமைச்சக மூத்த அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களும் கலந்து கொண்டனர். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘அடுத்த தலைமுறை சீர்த்திருத்தங்களுக்கான செயல் திட்டத்தை ஆலோசிப்பதற்கான கூட்டம் நடத்தப்பட்டது. எளிதான வாழ்க்கை, எளிதாக வணிகம் செய்தல், செழிப்பை அதிகரிக்கும் அனைத்து துறைகளிலும் விரைவான சீர்திருத்தங்களுக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’’ என்றார்.

Tags : Modi ,New Delhi ,Independence Day ,Delhi ,
× RELATED மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு...