×

துரந்த் கோப்பை கால்பந்து: அரை இறுதியில் இன்று நார்த்ஈஸ்ட் – சில்லாங் மோதல்

சில்லாங்: துரந்த் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இன்று நார்த்ஈஸ்ட்-சில்லாங் அணிகள் மோதவுள்ளன. துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 134வது தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து இன்றும், நாளையும் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. காலிறுதி ஆட்டங்களில் சில்லாங் லஜோங் எப்சி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை எப்டி-யை வென்றது. நடப்பு சாம்பியன் நார்த் ஈஸ்ட் யுனைடட் எப்சி 4-0 என்ற கோல் கணக்கில் போடோலேண்ட் எப்சியை சாய்த்தது. மற்ற 2 காலிறுதி ஆட்டங்களில் டயமண்ட் ஹார்பார் எப்சி 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்சியையும், ஈஸ்ட் பெங்கால் எப்சி 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் எஸ்ஜி-யையும் வென்றன.

அதன் மூலம் சில்லாங், நார்த்ஈஸ்ட், ஈஸ்ட்பெங்கால், டயமண்ட் ஹார்பார் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இன்று இரவு மேகலாயாவின் சில்லாங் நகரில் நடைபெற உள்ள முதல் அரையிறுதியில் சில்லாங்-நார்த்ஈஸ்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த 2 அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அந்த 3 ஆட்டங்களும் துரந்த் கோப்பை தொடரில் தான் நடந்துள்ளன. 3 ஆட்டங்களிலும் நார்த்ஈஸ்ட் அணிதான் வெற்றிப் பெற்று வரலாறை தொடர்கிறது. சில்லாங் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே இன்று நடைபெறும் அரையிறுதியில் வென்று நார்த்ஈஸ்ட் வரலாறை தொடருமா, சில்லாங் வரலாறை மாற்றுமா என்பது இன்று இரவு தெரியும்.

* முதல் முறை மோதல்
கொல்கத்தாவில் நாளை இரவு நடக்க உள்ள 2வது அரையிறுதியில் டயமண்ட் ஹார்பார் எப்சி-ஈஸ்ட் பெங்கால் எப்சி மோத உள்ளன. இந்த 2 அணிகளும் இதுவரை எந்த போட்டியிலும் நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. நாளை நடைபெறும் ஆட்டத்தில்தான் முதல் முறையோக மோத இருக்கின்றன.

Tags : Durant Cup Football ,Northeast ,Shillong ,Durant Cup ,
× RELATED யு-19 ஆசிய கோப்பை ஓடிஐ: ஆட்டிப்படைத்த ஆப்கானிஸ்தான்; மோசமாக தோற்ற நேபாளம்