×

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட நடை மேம்பாலப்பணி: ஆபத்தான முறையில் கடந்து செல்லும் பொதுமக்கள்

செங்கல்பட்டு, ஆக. 18: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றது. இதில், பாதசாரிகள் சாலையை கடக்க ஏதுவாக நடைமேம்பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்தது. தற்போது, அடிக்கடி எதிர்பாராத விதமாக திடீர் திடீரென மழை பெய்து வருவதால் நடைபாதை மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் நிரம்பியதால் நெடுஞ்சாலைத் துறை தற்போது இந்த பணியை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.

அதனால், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வரமுடியாததால் முற்றிலும் வியாபாரம் செய்ய முடியாததால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒருசில வாடிக்கையாளர்கள் ஆபத்தை உணராமல் புதியதாக கட்டப்பட்டு வரும் நடைபாதை மேம்பாலத்தை கடந்து மெடிக்கல் ஷாப், துணிக்கடை போன்ற கடைகளுக்கு அத்தியாவசிய தேவைக்காக செல்கின்றனர்.

ஆகவே, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்ட இந்த மேம்பால பணியை மீண்டும் துவங்கி வரவிருக்கிற மழைக்காலத்திற்குள் முழு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

 

Tags : Singaperumal ,Chengalpattu ,Chengalpattu district ,
× RELATED உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்