போச்சம்பள்ளி, ஆக. 18: முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குன்றுகள் நிறைந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு விரதம் இருந்து, காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஒரு அடி முதல் 200 அடி வரை வாய் அலகு போட்டும், விமானத்தில் பறந்தும், மார்பில் உரலை வைத்து மஞ்சள் இடிப்பது. தேர் இழுப்பது உள்ளிட்ட பல்வேறு அலகுகள் குத்தி கொண்டு நேர்த்தி கடன் செலுத்துவர்.
மேலும் நடைபயணமாக திருத்தணிக்கு செல்வர். இதனால் முருகன் பக்தர்கள் ஒரு மாதம் வரை அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். இவர்கள் விரதம் மேற்கொண்டு வருவதால் கறிக்கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த ஒரு மாத விரதம் நேற்று முன்தினம் முடிந்தது. இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று ஆடு, கோழி, வியாபாரம் ஜோராக நடந்தது. வழக்கத்திற்கு மாறாக ஆடு, கோழி விற்பனை
அதிகரித்தது.
