×

19 வது கோலடித்து மெஸ்ஸி அபாரம்

 

லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவில் நடந்து வரும் மேஜர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர்மியாமி அணியும், எல்ஏ கேலக்ஸி அணியும் மோதின. இப்போட்டியில் மெஸ்ஸி அபாரமாக ஒரு கோல் அடித்ததோடு, தனது அணி வீரர் மேலும் ஒரு கோல் போட அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அதனால், போட்டி முடிவில், இன்டர்மியாமி அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. இந்த தொடரில், மெஸ்ஸி 19வது கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Messi Abaram ,Los Angeles ,Major League Soccer ,United States ,Intermiami ,LA Galaxy ,Lionel Messi ,Messi ,
× RELATED பிட்ஸ்