சென்னை: புதிய தமிழக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு ஆணவ படுகொலைகளை தடுக்கும் வகையில் தனியாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இச்சட்டத்தின் கீழ் ஆணவக்கொலை குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது உடன் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
மேலும் இதுகுறித்த வழக்குகளை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில், தனி சிறப்பு விரைவு கோர்ட்டுகள் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் ஆணவ படுகொலைகள் குறித்து மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தற்பொழுது பேசுவதற்கு ஏதுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
