சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: பிரதமர் தனது சுதந்திர தின உரையில், மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தீபாவளி பரிசாக கொண்டு வரப்படும் என அறிவித்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். குறிப்பாக, ஜி.எஸ்.டி வரிச்சட்டத்தில் மாறுதல்கள் கொண்டு வரப்படும் என்பதை பிரதமர் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஒரே ஜி.எஸ்.டி வரியாக கொண்டு வரவேண்டும் என தொடர்ந்து, ஜி.எஸ்.டி அறிமுகமான 2017ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வலியுறுத்தி வந்த து. 5 சதவீதம், 18 சதவீதம் என கொண்டு வரப்பட்டால் உண்மையில் வரவேற்புக்குரியதாக இருக்கும். இதனால், வணிகர்கள், பொதுமக்களும் நிவாரணம் பெற இயலும். பிரதமரின் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
