- 4 நாள் மாநில மாநாடு
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- சேலம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- 4 நாள் 26 வது மாநில மாநாடு
- ஜனநாயகம் வெல்ல
- 26வது தமிழக மாநாடு
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…
சேலம்: சேலத்தில் 4 நாட்கள் நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடக்கும் மாநாட்டில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது தமிழ்நாடு மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் ேநற்று தொடங்கியது. 25வது மாநாடு நடைபெற்ற திருப்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட கொடி பெறுதல் மற்றும் தியாகச்சுடர்கள் பெறுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. இதையடுத்து கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் மூர்த்தி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பிரதிநிதிகள் மாநாடு, தலைமைக்குழு தேர்வு, அஞ்சலி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்பியுமான டி.ராஜா தொடக்கவுரையாற்றினார். அமர்ஜித்கவுர், டாக்டர் கே.நாராயணா, ஆனிராஜா, வெங்கடாசலம், டி.எம்.மூர்த்தி ஆகியோர் அரசியல் விளக்கவுரை நிகழ்த்தினர்.
மாலையில் கனவுகள் மெய்ப்பட என்ற பொருளில் சுப்பராயன் எம்பி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இதில் முன்னாள் எம்பி பீட்டர்அல்போன்ஸ் பங்கேற்று பேசினார். வெல்கஜனநாயகம் என்ற தலைப்பில் இன்று நடக்கும் 2வது நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதற்காக இன்று (16ம் தேதி) மாலை சென்னையில் இருந்து விமானத்தில் சேலம் வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வருடன் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர். நாளை (17ம்தேதி) கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 18ம்தேதி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
