- வேலாயுதம்பாளையம்
- மாரிமுத்து
- அத்திப்பாளையம் வி.என். புதூர்
- நொய்யல்
- கரூர் மாவட்டம்
- சத்ய
- கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- ஈரோடு-கரூர் நெடுஞ்சாலை...
வேலாயுதம்பாளையம், ஆக. 14: பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் வி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(47). விவசாயி. இவரது மருமகள் சத்யா(18). ஈரோடு -கரூர் நெடுஞ்சாலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாரிமுத்து, தனது மருமகள் சத்யாவை பைக்கில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கரூர் ஆத்தூர் பிரிவைச் சேர்ந்த ஆறுமுகம் (77). விவசாயி மீது நேருக்குநேர் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.
