×

தமிழக- கர்நாடக மாநில எல்லையில் தீவிர சோதனை

ஓசூர், ஆக.14: நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுக்ள பலப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூன்று மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகள் ஓசூர் அருகே அமைந்துள்ளன. இந்நிலையில், மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில், ஏஎஸ்பி அணில் வாக்கரே நேரடி மேற்பார்வையில் கர்நாடக- தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை நேற்று மேற்கொண்டனர்.

தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை, போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். டூவீலர், கார், சரக்கு வாகனங்கள், அரசு, தனியார் மற்றும் ஆம்னி பஸ்களை சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். வாகனங்களில் வரும் பணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர். ஜூஜூவாடி, கக்கனூர், சம்பங்கிரி, பேரிகை, தளி, கும்பளாபுரம், அஞ்செட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில், போலீசார் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Tamilaga-Karnataka ,border ,OSSEUR ,DAY ,Krishnagiri district ,three-state border ,Hosur ,Andhra ,Karnataka ,
× RELATED குவாரி, ஜல்லி கிரஷர்களால் மக்கள் பாதிப்பு