×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: வெளுத்து வாங்கிய எலெனா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று, கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா அபார வெற்றி பெற்றார். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா (26 வயது, 10வது ரேங்க்) – பெல்ஜியம் வீராங்கனை எலீஸ் மெர்டென்ஸ் (29 வயது, 12வது ரேங்க்) மோதினர். அதில் ரைபாகினா 4-6, 6-3, 7-5 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2மணி 12நிமிடங்கள் நடந்தது.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (28 வயது, 14வது ரேங்க்), ஜப்பானின் அவய் ஈடோ (21 வயது, 94வது ரேங்க்) களம் கண்டனர். அதிக அலைச்சலின்றி மேடிசன் 6-4, 6-0 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி 2 நிமிடங்களில் முடிந்தது. அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரீனா சபலென்கா (பெலாராஸ்), ஏக்தரினா அலெக்சாண்ட்ரோவா, அன்னா கலின்ஸ்கயா (ரஷ்யா), சொரனா கிறிஸ்டேயா (ருமேனியா) ஆகியோரும் 3வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

* ஆடவர் பிரிவில் சின்னர் வெற்றி
சின்சினாட்டி ஓபன் டெனிஸ் ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, இத்தாலியை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர் (23), கனடா வீரர் கேப்ரியல் டயலோ (23) மோதினர். அதில் சின்னர் 6-2, 7-6 (8-6) என நேர் செட்களில் ஒரு மணி 52 நிமிடங்கள் போராடி வென்றார். மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீரர் ஆட்ரியன் மன்னாரினோ, அமெரிக்க வீரர் டாம்மி பால் மோதினர். இப்போட்டியில் அபாரமாக ஆடிய ஆட்ரியன், 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

* இரட்டையர் பிரிவில் இந்தியர்கள் ஏமாற்றம்
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர்கள் ஏ.சந்திரசேகர்/ ராம்குமார் ராமநாதன் இணை 6-7 (5-7), 4-6 என நேர் செட்களில் எம்.பவிக் (குரோஷியா)/எம். அரவாலோ (இஸ்ரேல்) இணையிடம் தோற்று வெளியேறினர்.
நட்சத்திர வீரர் இந்தியாவின் ேராகன் போபண்ணா/ஈ.குயின் இணை, 5-7, 6-3, 6-10 என்ற செட்களில் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(ஜெர்மனி)/எம்.மெலோ(பிரேசில்) இணையிடம் போராடி ஏமாற்றமடைந்தது.

Tags : Cincinnati Open Tennis ,Elena ,Cincinnati ,Kazakhstan ,Elena Rybakina ,Cincinnati Open ,Cincinnati, USA ,Elena… ,
× RELATED பிட்ஸ்