- சேலம்
- சிவானந்தம்
- மேட்டுப்பட்டி
- வஜப்பாடி
- சேலம் மாவட்டம்
- சூளைமேடு,
- கொண்டலாம்பட்டி
- நெய்க்காரப்பட்டி பெரியகளம்
சேலம், ஆக.11: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சிவானந்தம் (40), இவர் கொண்டலாம்பட்டி சூளைமேட்டில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, தனது பைக்கில் நெய்க்காரப்பட்டி பெரியகளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கும்பல், அவரை வழி மறித்து சரமாரி தாக்கி, செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் சிவானந்தம் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சேலம் மல்லூர் அம்மாப்பாளையம் ஏரிக்கரையை சேர்ந்த சதீஷ் (38), சங்ககிரி சந்தைப்பேட்டையை சேர்ந்த சபரீசன் (22), சங்ககிரியை சேர்ந்த 16, 17 வயதுடைய 2 சிறுவர்கள் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சிவானந்தத்தின் செப்போன் மீட்கப்பட்டது. கைதான 4 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
