×

விபத்து அதிகமாக நடைபெறுவதாக புகார்: சிவகிரியில் பள்ளி அருகே பேரிகார்டு அமைப்பு

சிவகிரி,ஆக.11: சிவகிரி பள்ளி அருகே பேரிகார்டு அமைத்த காவல்துறைக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். சிவகிரியில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை கீழ்புறம் உயர்நிலை பள்ளியும், பயணிகள் நிழற்குடையும், மேல்புறம் தாலுகா ஆபிஸ், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, கருவூலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் உயர்நிலைப் பள்ளி அருகே விபத்துக்கள் அதிகமாக நடைபெறுவதாகவும், அந்த இடத்தில் பேரிக்கார்டு அமைத்துத் தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் சொந்த செலவில் அப்பகுதியில் பேரிகார்டு அமைக்க முடிவு செய்தனர். இதனிடையே இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சங்கரன்கோவில் டவுனுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு வந்த இன்ஸ்பெக்டர் முரளீதரன், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் பள்ளி அருகே ஆய்வு செய்து பேரிகார்டு அமைத்தனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பேரிக்கார்டு அமைத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

Tags : Shivagiri ,Shivagiri, ,Madurai-Kollam National Highway ,School ,Passenger ,Shrine ,Taluga Office ,Government Hospital ,Treasury Highway Department Office ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...