×

10 மாதங்களுக்கு பிறகு பிச்சாவரம் சுற்றுலா மையம் திறப்பு

சிதம்பரம், டிச. 7: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. சுர புன்னை காடுகளைக் கொண்ட இந்த சுற்றுலா மையத்தில் சுரபுன்னை காடுகளின் நடுவே படகு சவாரி செய்வது ஆனந்தமாக இருக்கும். இதனால் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திற்கு வருவார்கள். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி கொரோனா ஊரடங்கு காரணமாக பிச்சாவரம் சுற்றுலா தளம் காலவரையின்றி மூடப்பட்டது. இதற்கிடையே டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகளை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. அப்போது சுற்றுலா மையங்களை திறக்கலாம் என அறிவித்தது.

இதன் எதிரொலியாக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் 10 மாதங்களக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடுமையான மழை வெள்ளத்தால் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவில்லை. மதியத்திற்கு மேல் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்தனர். அவர்களுக்காக ஒரு சில படகுகள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டது. மழை வெள்ளப் பாதிப்பு முடிவடைந்த பிறகு பிச்சாவரம் சுற்றுலா பயணிகளுக்கு கணிசமான அளவில் பொது மக்கள் வருவார்கள் என தெரிகிறது.

Tags : Pichavaram Tourism Center ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை