இடைப்பாடி, ஆக.7: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாரியம்மன் கோயில்களில் ஆடிப்பண்டிகையையொட்டி நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டதால், காலை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குடும்பத்தோடு சுற்றுலா வந்திருந்தவர்கள் காவிரியில் விசைப்படகில் உல்லாச சவாரி செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
