×

கோரிக்கைகளை வலியுறுத்தி: கிராம அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி, ஆக. 7: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடிந்த கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் எனவும், 20 ஆண்டுகள் பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களை சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் என்றும் அரசாணை வெளியிட்டு அதற்கேற்ப ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Administrative Officers ,Tiruttani ,Tiruttani Taluk Office ,Tamil Nadu Village Administrative Officers Association ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...