×

கொளத்தூரில் நடைபெற்று வரும் வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடம், மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (06.08.2025) சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடம், ராஜாஜி நகரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் மற்றும் சேத்துப்பட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர், கொளத்தூரில் செயல்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் நான்கு தளங்களில் 20 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கல்லூரி முதல்வர் அறை, பேராசிரியர்கள் அறை, அலுவலகம், நூலகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் புதிய கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு கடந்த 23.12.2024 அன்றும், கொளத்தூர் இராஜாஜி நகரில் ரூ.8.88 கோடி மதிப்பீட்டில் 75 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுவதற்கு கடந்த 27.05.2025 அன்றும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள். எழும்பூர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் சார்பில் சேத்துப்பட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடம், மூத்த குடிமக்கள் உறைவிடம் மற்றும் சேத்துப்பட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வுகளின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் ஜ.முல்லை, பெ.க.கவெனிதா, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், மாநகராட்சி மன்ற உறுப்பினர் நாகராஜன், ஐசிஎப் முரளிதரன், சந்துரு, கல்லூரி முதல்வர் லலிதா, திருக்கோயில் செயல் அலுவலர் முரளீதரன், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Sekarbabu ,Kolathur ,Chennai ,Hindu ,Religious Institutions ,Sekharbhabu ,Arulmigu Kabaliswarar College of Arts and Sciences ,Chief Minister of ,Tamil Nadu ,K. ,Stalin ,institutions ,P. K. SEKARBABU ,KOLATUR ,BOOMBUKAR CITY ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...