×

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் ஒத்திவைப்பு

சென்னை: சென்னை ஹையாத் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கவிருந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹையாத் நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருந்த வீரர்கள் அனைவரும் பாதுக்காப்பாக உள்ளனர். வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Chennai Grand Master Chess Series ,Chennai ,Chennai Grand Master Chess ,Chennai Hyatt Star Hotel ,Hyatt ,star hotel ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...