×

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Weather Centre ,Chennai ,Meteorological Survey Centre ,Meteorological Centre ,Dindigul ,Tiruppur ,Erodu ,Salem ,Darumpuri ,Krishnagiri ,Teni ,Kowai ,Neelgiri ,Erode ,Dharumpuri ,Tirupathur ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...