×

பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு ராமதாஸ் அழைப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பாமக சார்பில் 2025க்கு விடை கொடுப்போம், 2026ஐ வரவேற்போம். புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டமும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டமும் வருகின்ற 29ம் தேதி திங்கட்கிழமை சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கில் நடைபெற உள்ளது.

புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பா.ம.க, வ.ச, ச.மு.ச உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மாநகரப் பகுதி நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும். மாநில செயற்குழு கூட்டம் 29.12.2025 காலை 10 முதல் 11.30 மணி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டம் 11.40 மணி முதல் நடைபெறும்.

Tags : PMK ,New Year Special General Committee Meeting ,Ramadoss ,Chennai ,New Year State Special Executive ,Committee ,Meeting ,State Special General ,Salem 5th Road ,Rathnavel… ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...