×

மாநகராட்சி கழிப்பறையின் மாடியில் தூங்கியவர் தவறி விழுந்து பலி

 

போரூர், ஆக.5: சென்னை வடபழனி புலியூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (52), பெயின்டர். இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளாக வீட்டின் அருகே உள்ள மாநகராட்சி கழிப்பறையின் மாடியில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் போதையில் கழிப்பறை கட்டிடத்தின் மாடியில் தூங்கிய போது, தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கழுத்து எலும்பு உடைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Porur ,Krishnamoorthy ,Vadapalani Puliyur ,Chennai ,Kilpauk government hospital ,
× RELATED உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்