×

தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார் ஆலத்தூர் தாலுகாவில் நல்ல மழை

பாடாலூர், ஆக.5: ஆலத்தூர் தாலுகாவில் நேற்று மாலை 4 மணியளவில் நல்லமழை பெய்தது. இதனால் பகல் முழுவதும் வெயிலில் அவதிப்பட்ட மக்கள் மாலையில் குளுமை நிலவியதால் நிம்மதியடைந்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் நேற்று காலை வெயில் அடித்தது. இந்த நிலையில் மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேரம் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த மழையாக பெய்தது. ஆலத்தூர் தாலுகாவில் பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், நாரணமங்கலம், மருதடி, விஜயகோபாலபுரம், காரை, புதுக்குறிச்சி, தெரணி, கொளக்காநத்தம், கொளத்தூர், அணைப்பாடி, அயினாபுரம், இலுப்பைக்குடி, கூடலூர், பிலிமிசை ஆகிய கிராமங்களில் மழை கொட்டித்தீர்த்தது. மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர். இந்த மழை சின்ன வெங்காயம் சாகுபடிக்கு ஏற்றதாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Alathur taluka ,Badalur ,Perambalur district ,
× RELATED தேர்வு மையத்தில் ஐஜி, எஸ்பி ஆய்வு; கடும் பனிப்பொழிவு குளிரால் மக்கள் அவதி