×

லியோனல் மெஸ்ஸி வலது காலில் காயம்

நியுயார்க்: மேஜர் லீக் கால்பந்து (எம்எல்எஸ்) போட்டிகளில் இன்டர் மியாமி அணிக்காக ஆடிவரும் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து போட்டி ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸியின் (38) வலது கால் சதைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக, அந்த அணி நிர்வாகம் கூறியுள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ள அவர் மீதமுள்ள போட்டிகளில் ஆடுவது சந்தேகமே எனக் கூறப்படுகிறது. எம்எல்எஸ் போட்டிகளில், மெஸ்ஸி 18 கோல்கள் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Lionel Messi ,New York ,Inter Miami ,Major League Soccer ,MLS ,Messi ,
× RELATED பிட்ஸ்