×

5வது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபரின் மனைவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

 

திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஹிமாயத் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார்ஜெயின், தொழிலதிபர். இவரது மனைவி பூஜாஜெயின் (43). தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பூஜா கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். எவ்வித சிகிச்சையும் பலனளிக்கவில்லையாம். ஆனால் கடவுள் பக்தி கொண்ட அவர், தினமும் நாள் முழுவதும் ஆன்மிகத்திலும் தியானத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அருண்குமார்ஜெயின் வழக்கம்போல் தனது அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார். மகனும், மகளும் வீட்டில் இருந்தனர். பணிப்பெண் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

ஆனால் பூஜாஜெயின் வழக்கம்போல் வீட்டில் உள்ள பூஜை அறையில் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். மதியம் வரை பூஜை அறையில் தனியாக அமர்ந்திருந்து தியானத்தில் இருந்த அவர் யாரும் பார்க்காத நேரத்தில் 5 வது மாடிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் திடீரென கீழே குதித்துள்ளார். சத்தம் கேட்டு அவரது மகன், மகள், வேலைக்கார பெண் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது பூஜா ஜெயின் படுகாயமடைந்து இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூஜா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் அமர்ந்திருந்த அறையில் இருந்து அவர் எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கண்டெடுத்தனர். அதில் நாம் கடவுளின் தியானத்தில் மூழ்கி அர்ப்பணித்துக் கொண்டால் நமக்கு கடவுள் சொர்க்கத்தை அளிப்பார் என்று ஒரு சமண குருவின் வசனத்தை எழுதி வைத்திருந்தார். கடவுள் என்னை அழைக்கிறார். எனவே நான் கடவுளிடம் செல்கிறேன் என்றும் அதில் எழுதப்பட்டிருந்ததாம். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tirumala ,Arunkumar Jain ,Himayat Nagar, Hyderabad, Telangana ,Pooja Jain ,Pooja ,God ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...