3 சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் நீதிமுறை சட்டம்: அமித்ஷா தகவல்

புதுடெல்லி: மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் நீதி முறையை வெளிப்படுத்தும் வகையிலான மூன்று மசோதா நிறைவேற்றப்படும் என்று அமித் ஷா கூறினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில், ‘இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக, புதிய குற்றவியல் நீதி முறையை வௌிப்படுத்தும் வகையிலான மூன்று மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று சட்டங்களைத் திருத்தும் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளன. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கான நிலைக்குழு அவற்றை ஆய்வு செய்து வருகிறது’ என்றார்.

The post 3 சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் நீதிமுறை சட்டம்: அமித்ஷா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: