மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இயக்குநர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே பணத்தை மீட்க வாய்ப்புள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களின் முன்ஜாமீன் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை, மதுரை, சிவகங்கை, திருவாரூர், தேவகோட்டை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனமானது, தங்கள் பயனர்களுக்கு அதிக வட்டி தருவதாகவும், குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு பணம் இரட்டிப்பாகும் என கூறி சுமார் 70 ஆயிரம் பேரிடம் முகவர்கள் மூலம் ஆசை வார்த்தைகள் கூறி பணம் வசூல் செய்துள்ளது.
இதன் பின்னர், பணத்தை கட்டியவர்கள் தங்கள் பணம் திரும்ப கொடுக்கப்படாததை அடுத்து, பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறையின சில மாதங்களுக்கு முன்னர் தென் மாவட்டத்தில் 17 இடஙக்ளில் சோதனை மேற்கொண்டனர். இதில், சுமார் 22 கோடி ருபாய் வரையில் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.
அதே போல, நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்கள், முகவர்கள் என 10 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, 8 பேர் கைது செயப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த நிறுவன இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் உட்பட 8 பேர் தங்களுக்கு முன்ஜாமின் அளிக்க கோரி மனு அளித்திருந்தனர். இந்த வழக்கு கடந்த 10ம் தேதி நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடந்த போது, நியமக்ஸ் தரப்பில் கால அவகாசம் கோரியதால் 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில், நிதி மோசடி குறித்து 126 பேருக்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில், 8 பேர் கைது செய்த நிலையில், 10க்கும் 10 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் விரைவில் வழக்கறிஞர் ஆஜராகி இந்த வழக்கில் குறிப்பாக பல ஆயிரம் கோடி மோசடி நடைபெற்று இருக்கிறது, வெளிநாடுகளில் பொதுமக்களின் பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான ஆவணங்களும் சிக்கியிருக்கிறது.
எனவே காவலில் எடுத்து விசாரணைக்கு சரித்தால் மட்டுமே முதலீடு செய்த மக்களின் பணம் மீட்பதற்கான வாய்ப்பு உள்ளது என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, தொடர்ந்து இந்த கருத்து அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து நீதிபதி, வழக்கு விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதால் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி சிறிது உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் நியோமேக்ஸ் நிதி நிறுவன இயக்குநர் அனைவரின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது
The post நியோமேக்ஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.