×

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த கோரி 16 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதால் மறுதேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, 16 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

The post நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Dinakaran ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...