×

புரிதல் இல்லாத நிர்மலா சீதாராமனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேணும்: பிரதமருக்கு கர்நாடகா முதல்வர் கோரிக்கை

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், ‘கர்நாடகாவுக்கு மோடி அரசு இழைத்த அநீதியை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறைக்க முயல்கிறார். நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது (2004-2014) கர்நாடகாவுக்கு 60,779 கோடி ரூபாயை வழங்கியதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் (2014-2024) 2,36,955 கோடி ரூபாய் வழங்கியதாக கூறியுள்ளார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் பட்ஜெட் தொகை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை அவர் குறிப்பிட மறந்து விட்டார்.

அறியாமையால் இவ்வாறு கூறுகிறாரா? அல்லது வேண்டுமென்றே மக்களை தவறாக வழிநடத்திச் செல்கிறாரா? எனவே ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஒன்றிய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். பட்ஜெட் குறித்த அடிப்படை புரிதல் கூட அவரிடம் இல்லை. அடிப்படை புரிதல் இல்லாத ஒன்றிய நிதி அமைச்சரை நம்புவது ஆபத்தானது. எனவே நிர்மலா சீதாராமனை உடனடியாக அமைச்சரவையில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும். நிர்மலா சீதாராமனை நிதியமைச்சராக வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது’ என்றார்.

 

The post புரிதல் இல்லாத நிர்மலா சீதாராமனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேணும்: பிரதமருக்கு கர்நாடகா முதல்வர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Karnataka ,Chief Minister ,Bengaluru ,Siddaramaiah ,Union Finance Minister ,Modi government ,UPA government ,Karnataka… ,Dinakaran ,
× RELATED நிதிநிலையை கருதி இலவசங்களை மாநில...