உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க தேசிய மஞ்சள் வாரியம் அமைத்தது ஒன்றிய அரசு

புதுடெல்லி: மஞ்சளின் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு தேசிய மஞ்சள் வாரியத்தை ஒன்றிய அரசு அமைத்து அறிவித்தது. தெலங்கானாவில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. இதுதொடர்பாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘விவசாயிகள் நலன் கருதி தேசிய மஞ்சள் வாரியத்தை அரசு அமைத்துள்ளது. நாட்டில் மஞ்சள் மற்றும் மஞ்சள் சார்ந்த தயாரிப்புகளை மேம்படுத்துவதிலும், அதிகரிப்படுத்துவதிலும் இந்த வாரியம் கவனம் செலுத்தும். குறிப்பாக, மஞ்சள் ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.8,400 கோடியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

The post உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க தேசிய மஞ்சள் வாரியம் அமைத்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: