×

நாசா தலைவராக ஐசக்மேன் நியமனத்தை வாபஸ் பெறுவதாக டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: நாசாவின் தலைவராக எலான் மஸ்கின் கூட்டாளியான ஜாரேட் ஐசக்மேனை நியமனம் செய்வதற்கான பரிந்துரையை திரும்ப பெறுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதும், அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் தலைவராக தொழிலதிபரும்,விண்வெளி ஆர்வலருமான ஜாரேட் ஐசக்மேன்(42) என்பவரை நியமிப்பதாக அறிவித்தார்.

பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் ஜாரேட் ஐசக்மேன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் சர்வதேச பணக்காரருமான எலான் மஸ்கின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் பதிவிடுகையில், ஜாரேட் ஐசக் மேனின் முந்தைய செயல்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகு அவரது நியமனத்துக்கான பரிந்துரையை திரும்ப பெறுகிறேன். ஒரு புதிய நபரை விரைவில் அறிவிப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post நாசா தலைவராக ஐசக்மேன் நியமனத்தை வாபஸ் பெறுவதாக டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Trump ,Isaacman ,NASA ,Washington ,President Trump ,Jared Isaacman ,Elon Musk ,US ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...