நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு: தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் 15,000 பேர் பங்கேற்பு

சென்னை: நாடு முழுவதும் நாளை நடக்க உள்ள நீட் தேர்வில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 15 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். எம்பிபிஎஸ், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறை உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் இந்த ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளதால், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) மே 7ம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ மாணவியர் இணைய தளம் மூலம் தங்களை பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இத தொடர்பான முன்னறிவிப்பு அனைத்து மாணவ மாணவியருக்கும் இணைய தளம் மூலம் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.

அதன் தொடர்ச்சியாக 3ம் தேதி முதல் ஹால்டிக்கெட்டுகளை விநியோகம் செய்து வருகிறது. அதில் மேற்கண்ட 499 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் தொடர்பான விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மே 7ம் தேதி மதியம் 2மணி முதல் மாலை 5.20 வரை தேர்வு நடக்கும். இது தொடர்பான முழு விவரங்களும் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த தேர்வில் கடுமையான கெடுபிடிகள், பரிசோதனைகள் கடைபிடிக்கப்படும். மேலும், தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் முன்னதாக ஒரு மணி நேரத்துக்கு முன் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 பேர் எழுத உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1 லட்சம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். அவர்களில் அரசுப் பள்ளிகளில் கடந்தகல்வி ஆண்டில் பிளஸ்2 தேர்வை எழுதி முடித்துள்ள மாணவ மாணவியர் 15 ஆயிரம் பேர் எழுத உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 18 லட்சத்து 72,341 பேர் எழுத உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1 லட்சம் பேர் வரை பதிவு செய்துள்ளனர்.

The post நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு: தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் 15,000 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: