அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையில் கேட்பதையெல்லாம் கொடுக்கும் இந்த அற்புத விளக்கு அதுபோல தான் தங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் சிறப்பான லாபம் தருவோம் என்ற நம்பிக்கையை ஒரு வார்த்தையில் சொல்லி இருக்கிறது இந்நிறுவனம். ஜியோ பைனான்சியல் சர்விஸ் லிமிடெட் மற்றும் அமெரிக்காவை தலமாக கொண்ட பிளாக்ராக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சம பங்கில் தொடங்கியது தான் jio blackrock asset management private limited நிறுவனம்.
சந்தை ஒழுங்குமுறை ஆணையமான சிபியிடம் கடந்த மே 26ம் தேதி அனுமதி பெற்ற ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் நிறுவனம் தற்போது தனித்துவமான முதலீட்டு மேலாண்மை தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவெறும் டிரைலர் தான், முதலீட்டை எளிதாக அணுக கூடியதாகவும் மலிவு விலையில் மாற்ற நாங்கள் இருக்கிறோம் என ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் கூறியுள்ளது. அந்த வகையில் ஏராளமான மியூச்சுவல் திட்டங்கள் நிதி சந்தையில் கொட்டி கிடக்கும் நிலையில் ஜியோ பிளாக்ராக் என்ன செய்ய போகிறது என்பது முதலீட்டாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மியூச்சுவல் ஃபண்ட் துறையில் களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ: எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அலாவுதீன் முதலீட்டு தளம் appeared first on Dinakaran.
